கர்நாடக மாநிலத்தில் பாயும் தென்பெண்ணையாற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள சிக்கமலாளூரில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு 400 கிலோமீட்டர் பயணித்து, கடலூர் வழியாக கடலில் கலக்கிறது.
பெங்களூரில் பாயும் தென்பெண்ணையாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் பெங்களூரு நகரின் கழிவுகள் வாத்தூர் என்ற ஏரியில் கலக்கப்பட்டு பின்பு, இந்த ஏரியின் நீர் தென்பெண்ணையாற்றில் கலப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அவ்வாறு மாசுபடும் தென்பெண்ணையாறு தமிழகத்தில் பாய்வதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
எனவே, தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.