சவூதி அரேபிய பட்டத்து இளவரசருடன் அஜித் தோவல் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து சுமார் 2 மணி நேரம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்தை குறித்து பதில் அளித்த தோவல், இந்தியாவின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் வரம்பு மீறி தலையிடுவதாக புகார் அளித்தார்.

தீவிரவாதத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் உலக அளவிலான பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துக் கொண்டிருப்பதாக சவூதி இளவரசர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவூதி அரேபியா சென்று காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு கோரியதைத் தொடர்ந்து இந்தியா அதனை முறியடிக்கும் வகையில் அஜித் தோவலை அனுப்பிவைத்துள்ளது.

சவூதியின் ஆரம்கோ எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லாத விமானம் மூலம் நடைபெற்ற தாக்குதலினால் ஒபெக் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இப்பிரச்சினையும் அஜித் தோவலின் சவூதி அரேபிய இளவரசர் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே