ஊரகப் பகுதிகளில் சுகாதார முன்னேற்றம் – அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இதற்கான விருதை பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே