அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக அமெரிக்கா வாழ் தமிழரான கமலா ஹரிஷ் அறிவிக்கப்ட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹரிஷ், வேட்பாளருக்கான தேர்தலில் போதிய ஆதரவு இல்லாததால் அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

தற்போது இவர் துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

கமலா ஹரிஷ் தமிழகத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர், கமலா ஹரிஷ்-யின் தாத்தா டிவி கோபாலன் சுதந்திர போராட்ட தியாகி, அவரது பாட்டி இராஜம் பெண்கள் உரிமைக்காகப் போராடியவர்.

கமலாவின் தாயார் பெயர் ஷியாமலா இவர் 19 வயது வரை சென்னையில் தான் படித்தார்.

புற்றுநோய் நிபுணரான இவர் ஜமாத்தை சேர்ந்த தோனல்டு ஹேரிஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

வழக்கறிஞரான கமலா ஹரிஷ் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் இருந்து செனட்டராக ஆக தேர்வு செய்யப்பட்டவர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டாலும் கமலா ஹரிஷின் தொடர்பு விட்டுப் போகவில்லை. அவர் அடிக்கடி சென்னை வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக கலிபோர்னியாவில் செனட்டராக பதவி ஏற்ற போது, சென்னையில் வசித்து வரும் தனது சித்தி சரளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் இடம் தனது சித்தி சரளாவை அறிமுகம் செய்து வைத்தார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே