காற்று விற்பனை..!! அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் நிறுவனம்..!!

இந்த ஆண்டு முதலே உலகெங்கிலும் பலர் வெகு தொலைவில் சிக்கித் தவிக்கின்றனர்.

இங்கிலாந்தில், வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அதாவது தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா (Coronavirus) தொற்றின் நோயின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நிறுவனம், அந்நாட்டு மக்களுக்கு “காற்று பேக்கேஜ்” வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. 

தனியார் நிறுவனமான MY BAGGAGE நிறுவனம் தற்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

அதாவது 500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை 2500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருகிறது.

அதன் காற்று தேவைப்படும் போதெல்லாம் அதைத் திறந்து காற்றை சுவாசித்து விட்டு, பின்னர் அதை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.

இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளைத் தவிர, வேறு எந்த பகுதியிலும் நிறுவனம் சிறப்பு “காற்று பேக்கேஜ்” விற்பனையை தொடங்க வில்லை.

பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்றை ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது.

இடம்பெயரும் பிரிட்டன் மக்களுக்கு, சொந்த நாட்டின் காட்டின் வாசனை உணர்வை இணைக்கும் நோக்கத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட பின்னர் பாட்டில் காற்றை விமான மூலம் சப்ளை செய்ய ஊக்கமளித்ததாக நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே