2020 புத்தாண்டு நீடித்த அமைதியுடனும் மகிழ்வுடனும் எதிர்பார்த்திருந்த உலக மக்களுக்கு மூன்றாம் உலகப் போர் என்னும் பீதியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத் நகரில் நடந்த தாக்குதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் உத்தரவின் பேரில் ஈரானின் முக்கியத் தளபதியான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா இச்செயலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக ட்ரம்ப் உத்தரவின்படி சுமார் 750 அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் #WorldWar3, #WorldWarIII போன்ற ஹேஷ்டேக்கள் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களே இன்னும் முடியாத சூழலில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள போர் பதற்றம் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே