பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு..!!

பஞ்சாப் சீக்கிய குரு தேக் பகதூர் 400-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு திடீரெனச் சென்று வழிபாடு நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல், கூடுதல் பாதுகாப்போ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல், தில்லியில் குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான குரு தேக் பிறந்த நாள் இன்று. இதையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நாளில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட சுட்டுரையில், குரு தேக் பகதூர், கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடி, மனித குலத்தைக் காக்கப் போராடியவர். அவரது உயர்ந்து தியாகத்தால் இன்றும் அழியாமல் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது சுட்டுரையில், ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கை, இலட்சியம் மற்றும் உயர்ந்த தியாகத்தை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே