தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போதிலும் கடந்தே ஜுலை முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இப்போது எம்.பி, எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான கே.எஸ்.விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ரெட்டியார்பட்டி நாராயணனின் 2-வது மகளுக்கும், மகனுக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்களும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே