பப்ஜியில் மலர்ந்த காதல்..; திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்..!

முகநூல் காதல், டிக்டாக் காதல் என காலத்திற்கேற்றாற்போல் காதலும் மாற துவங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது ஒருபடிமேல் சென்று குமரியில் பப்ஜி விளையாட்டு மூலம் காதலில் இணைந்துள்ளனர் இளம் காதல் ஜோடிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்தவர் சசிகுமார் என்பவரின் இளைய மகளாக 20வயதான பபிஷா.

இவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று கல்வியை இடையிலேயே விட்டுவிட்டார்.

தொடர்ந்து மொபைல் போனில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டதால், மணிகணக்கில் பப்ஜியில் விளையாடி கொண்டிருந்தார்.

பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார் என கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனிடையே, பபிஷாவுக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான 24வயதான அஜின் பிரின்ஸ் என்பவருடன் பப்ஜியுடன் காதலாக மாற துங்கியது.

இந்நிலையில், கடந்த 19-ம் தியதி தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார்.

இதனையடுத்து தனது மகளை காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்தால் புகார் அளித்தனர்.

புகார் குறித்த வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் காதல் ஜோடிகளை தேடி வலையை வீச துவங்கினர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் 22ம் தேதி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், இருவீட்டாரும் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள ஆலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்து, காதலர்களை அஜினின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே