அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

முக்கிய அம்சமாக அம்மா வாஷிங் மெஷின், அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

திமுக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல அம்சங்கள் இடம் பெற்று அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. 

அதிமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

அதைவிட அதிக ஸ்கோர் செய்யும் வகையில் அதில் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்து பயணச் சலுகைத் திட்டம்

ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்படும்

வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்

அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்

கல்விக் கடன் தள்ளுபடி

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா இலவசம்

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்த்தப்படும்

விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை

ஈழத்தமிழர் உட்பட எழுவர் விடுதலையில் அதிமுக உறுதி

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கு இலவச மின் இணைப்பு

சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்

தென் தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் கால்நடை பூங்கா

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும்

மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்

பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

தமிழறிஞர் சீகன் பால்கு வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்படும்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் அடிப்படை ஊழியர்களுக்கு நலவாரியம்

கிராம ஊர்க்கோவில் பூசாரிகளுக்கு ஊக்க ஊதியம்

எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கு உதவித்தொகையுடன் புதிய திட்டங்கள்

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்

தூய்மை பணியாளர் ஊதியம் ரூ.6,000ஆக உயர்த்தப்படும்

நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்

கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை

கடல் சுற்றுலா பூங்காக்கள் உருவாக்கப்படும்

நாட்டுப்புற கலைஞர்களின் நலன் பேணிக்காக்கப்படும்

சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெசின் வழங்கப்படும்

ஏழைத் தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் அமல்படுத்தப்படும்

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்காத்திட தனித்துறை ஏற்படுத்தப்படும்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை

தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்

அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்

அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால்

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி திட்டம்

புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

ஏழை, நடுத்தர மக்கள் நிதிச்சேவைகளை பெற, பயன்படுத்த “அம்மா பேங்கிங் கார்டு(Amma Banking Card)” திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதி திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவித்தொகை ரூ.21,000ஆக உயர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் வைப்பு நிதி ரூ.70000ஆக உயர்த்தப்படும்

முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, 2ஆம் கட்ட நகரங்களில் சிசிடிவி கண்காணிப்புத் திட்டம்

18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா வாகன பயிற்சி & ஓட்டுநர் உரிமம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே