விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் அமோக வெற்றி

20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் அமோக வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சுமார் 8.30 மணிக்கு மேல் துவங்கியது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன், திமுக வேட்பாளர்களை விட முன்னிலை பெற்று இருப்பது தெரியவந்தது.

இதன்பிறகும் தொடர்ச்சியாக, அதிமுகதான் முன்னிலை பெற்றது. எந்த நேரத்திலும், திமுகவால் முன்னிலை பெறவே முடியவில்லை.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தவிர நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியுள்ளது. அங்கு மும்முனைப் போட்டி நிலவியது.

19வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,09,315வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

ஆரம்பம் முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 43175 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே