நாங்குநேரில் 9ஆவது சுற்றில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை

நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் தொடர்ந்து 8 சுற்றுகளாக அதிமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில், ஒன்பதாவது சுற்றில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஒன்பதாவது சுற்றில் மட்டும் முன்னிலை பெற்றிருக்கிறார்.

தொடர்ச்சியாக எட்டு சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் நாராயணன் நடைபெற்று முன்னணி பெற்று வந்த நிலையில் 9 ஆவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 4597 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

அதிமுக வேட்பாளர் நாராயணன் 3161 வாக்குகளை ஒன்பதாவது சுற்று முடிவில் பெற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது அதிமுக வேட்பாளர் நாராயணன் கூடுதலாக 12906 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

கூடுதல் வாக்கு வித்தியாசம் அதிமுக வேட்பாளருக்கு அதிகமாக இருக்கும் நிலையில் ஒன்பதாவது சுற்றில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் அந்த குறிப்பிட்ட ஒன்பதாவது சுற்றில் மட்டும் 1400 ஆக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே