தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைப்பெற்ற யுத்தத்தில் தர்மம் வென்றுள்ளது என இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது எனவும், ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் எனக் கூறிய அமைச்சர், இடைத்தேர்தல் வெற்றி 2021 தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாக தெரிவித்தார்.