நடிகை யாமி கெளதம் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆதித்யா தர்ரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான யாமி கெளதம் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பேர் அண்ட் லவ்லி விளம்பரம் மூலம் இந்தியா முழுக்க கவனம் பெற்றவர். தமிழில் ராதா மோகனின் கெளரவம், கெளதம் மேனன் தயாரித்த தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில், இவருக்கும் தேசிய விருதுகளைக் குவித்த உரி தி சர்ஜிக்கல் ஸ்டரைக் படத்தின் இயக்குநர் ஆதித்யா தர்ருக்கும் நேற்று திடீர் திருமணம் நடந்தது. கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் யாமி கெளதமின் நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த உரி தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என நான்கு தேசிய விருதுகளைக் குவித்தது. இப்படத்தில், நடிக்கும்போதுதான் யாமி கெளதமுக்கும் இயக்குநர் ஆதித்யா தர்ருக்கும் காதல் மலர்ந்துள்ளது. திடீரென்று திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை யாமி கெளதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.