படப்பிடிப்பு தளங்களில் முதலுதவி வாகனம் இருக்க வேண்டும் : ஆர்.கே.செல்வமணி

படப்பிடிப்பு தளங்களில் முதலுதவி வாகனம் இருக்க வேண்டும் என திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி  வலியுறுத்தியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்றார்.

ஆங்கில படத்தின் படப்பிடிப்புக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தமிழ் படங்களுக்கும் வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் படப்பிடிப்பின்போது பயன்படுத்தக்கூடாது என்றும் ஆர்.கே. செல்வமணி வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே