புதிய விதிகளுக்கு இணங்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை..!!

புதிய ஐடி விதிகளை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள அமலுக்கு வந்துள்ளன. அதுன்படி, சமூக ஊடகங்கள், அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வெளியிட வேண்டும். புகார்களை பெறவும், நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவில் அதுிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதற்கு, டுவிட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டுவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிய விதிகளில் குறிப்பிட்டு உள்ளபடி புகார்களை பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் உரிய அதிகாரியின் பெயரை டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

டுவிட்டர், பரிந்துரை செய்த குறைதீர்க்கும் அதிகாரி இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியயர் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் அலுவலக முகவரி, உண்மையில் இந்தியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தின் முகவரி. இது விதிகளுக்கு புறம்பானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79 ன் கீழ் டுவிட்டர் நிறுவனம் விளக்கு அளிக்கப்படாது. விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே