முதலில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை; பின்னர் முதல்வர் பற்றி முடிவு – உத்தவ் தாக்கரே

மகராஷ்டிராவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பாதிக்கு பாதி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அதன்பிறகு முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் பலருக்கும் புதிய கோணத்தை காட்டும் எனக் கூறினார்.

பாரதிய ஜனதா கேட்டுக் கொண்டதாலேயே சிவசேனா குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட தாகவும், எப்போதும் இதுபோலவே இருக்க முடியாது என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

தமது மகன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே