கொள்ளையைடித்து கள்ள காதலிக்கு கொரோனா தோடு!

சென்னையில் உள்ள சென்னை அண்ணாசாலை குடியிருப்பு பகுதிகளில் வீட்டில் உள்ள தங்க பொருள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு அதிகளவு நடைபெற்று வந்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்த குடும்பத்தினர் சம்பவத்தன்று, மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர்.

பின்னர் காலையில் வீட்டிற்கு வரும் போது வீட்டில் திருட்டு நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராக்களை சோதனை செய்தனர். 

இந்த சோதனையில், திருடன் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மற்றொரு நபரை சந்தித்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபரை காவல் துறையினர் விசாரணை செய்கையில், திருட்டில் ஈடுபட்ட நபர் திருவெல்லிக்கேணி பகுதியை சார்ந்த மேகா என்கிற மேகநாதன் என்பது தெரியவந்துள்ளது.

திருவெல்லிக்கேணிக்கு விரைந்த காவல் துறையினர் மேகநாதனை கைது செய்து விசாரித்தனர்.

இதில், தற்போது கொரோனா காரணமாக மனைவி மற்றும் குழந்தையை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நிலையில், வீடு வீடாக கொள்ளையடித்து அங்குள்ள மற்றொரு பெண் தோழிக்கு கொரோனா தோடு, ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில், நகைக்கடையில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை காணுகையில் 36 கிராம் நகை விற்பனை செய்யப்பட்டதும், ரூ.5 இலட்சம் பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில், சி.சி.டிவி பெரும் உதவி செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே