பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்..! கோவையில் பயங்கரம்…!!

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்திய மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்திய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த கேம்ராம் சிங் என்பவர் கோவை அடுத்த சூலூர் விமான படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள கேந்திரியா வித்யா பள்ளியில் 11 மற்றும் 9 வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகனாதன் இருவரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆசிரியர்கள் தமிழரசி, திவ்யா மற்றும் மேலும் ஒரு ஆசிரியை துணையோடு உதித்குமார் சிங்கின் கைகளை பிடித்துக்கொண்டனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் மேகநாதன், மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்தியதோடு, ஆசன வாயிலில் விரலால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள், நடந்தவற்றை தாய் சீமா குமாரியிடம் கூற இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இரண்டு குழந்தையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஏற்கனவே தலைமை ஆசிரியர் மேகனாதன் இது போல் பல முறை இந்த மாணவர்களிடம் தவறாக நடந்து வந்த போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்களின் அம்மா சீமா குமாரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பெற்றோர்களிடையேயும், மாணவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே