செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!!

சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பும் பொழுது கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அத்திமானம் என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பூந்தமல்லி பகுதியில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் கோவிலுக்குச் சென்று காரில் திரும்பும் வழியில் அத்திமானம் என்ற இடத்தில் சாலையில் லாரி மீது வேகமாக மோதியதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள், இரண்டு ஆண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

விபத்து குறித்து படாளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, அவருடைய மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி மற்றும் சாந்தி, கார் ஓட்டுநர் ஆகியோர் விபத்தில் பலியாகினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே