கீழடியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அந்நிலம் மாற்று பயன்பாட்டிற்கு வராமல் தடுப்பதற்கும் கீழடி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நன்னெறிக் கழகம் சார்பில் கீழடி வரலாற்று பார்வை நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழடியில் ஆய்வுகள் குறித்தும், அதன் குறித்தும் சு.வெங்கடேசன் பேசினார்.
கீழடி ஆய்வு பெரிய உயிரினத்தின் வால் முனை மட்டுமே எனவும் அடுத்தடுத்த ஆய்வுகளில் தமிழ் வரலாற்றில் உடல், தலை, முகம் கிடைக்கும் எனவும் கூறினார்.
தேசிய அளவில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்து பேசியதற்கு பிறகு, கீழடி நாகரிகம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் கூறினார்.