வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தினை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பாகேற்றுள்ளனர். அதன்பிறகு காணொலி வாயிலாக பேசிய பிரதமர் கூறியதாவது,

  • 3 சதவீத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.
  • விவசாயப் பொருட்களை பாதுகாக்க, குளிர் சாதன கிடங்குகள் அமைக்க கடன்.
  • 12 பொதுத்துறை வங்கிகள், 11 வேளாண் வங்கிகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி, 3 ஆண்டுகளில் ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் கடன்
  • இந்த கடன் உதவிகள் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும்
  • ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தால் ஆன்லைன் வழியாகவே கடன் ஒப்புதல்

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே