MASK NAAN போன்ற வித விதமான உணவுகள் கொரோனா வடிவில் விற்பனை!

ஜோத்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றின் மெனுவில் கொரோனாவும் சேர்க்கப்பட்டு விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு கோவிட், ஊரடங்கு, சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட பல வார்த்தைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

கொரோனா தோசை, முகக்கவச பரோட்டா என உணவுப் பொருட்களில் புதுமையை புகுத்தி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மக்கள் மத்தியிலும் இதுபோன்ற உணவுகளுக்கு வரவேற்பு இருக்கிறது.

கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற உணவுகளை தயாரிப்பதாக ஓட்டல் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கோவிட்-19 என்ற கருப்பொருள் வைத்து விதவிதமான உணவுகளை தயார் செய்து வருகின்றனர்.

அந்த ஓட்டலில் மாஸ்க் நான், கோவிட் கறித்தொக்கு பிரபலமாக ஆரம்பித்துள்ளது.

அதேபோல் கொரோனா வடிவத்தில் ’மலாய் கோஃப்டா’ தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள உரிமையாளர், புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது மக்கள் அதனால் ஈர்க்கப்படுவார்கள் என்றும்; அதனால் ஓட்டல் மெனுவில் கொரோனாவை சேர்த்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவதாக கூறியுள்ள அவர், கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றும் என்று தெரிவித்துள்ளார்.

இங்கு வரும் வாடிக்கையாளர்கள், சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமல்லாமல் மெனு கார்டை தொடாமல் ஆர்டர் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா மெனு மிகவும் பிடித்ததால், ஓட்டலுக்கு நிறைய பேர் வர ஆரம்பித்துள்ளார்கள் என்று ஓட்டல் உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே