அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இந்த சட்ட மசோதா நிறைவேறியதன் மூலம், சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் ஏழை-எளிய மாணவர்களுக்குக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.