அபராத தொகை 10 கோடியை செலுத்த அனுமதி கோரும் சசிகலா..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் ஆண்டு விடுதலை ஆவார் என்று ஆர்டிஐ தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் ரூபாய் 10 கோடி அபராதத் தொகையை அவர் செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே தனது அபராத தொகையான ரூபாய் 10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி விட்டார் என்றும்; இதனை அடுத்து சுதாகரன் அபராத தொகையை செலுத்திய நிலையில் தற்போது சசிகலாவும் அவரது தொகையை செலுத்த மனுதாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே