5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாகவும்; ஐந்து நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே