வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இந்த ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவிக்கின்றன.

தற்போது மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இதே அடிப்படையில் மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.

மாதம் முதல் நாள் அறிவிக்கப்படும் இந்த விலை மாதம் முழுவதும் மாறாமல் இருந்து வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை ரூ.50 அதிகரிக்கப்பட்டது.

ஒரே மாதத்தில் இருமுறை சமையல் எரிவாயு விலை உயர்ந்ததால் மககள் கடும் துயர் அடைந்தனர். தற்போது இன்று முதல் மீண்டும் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தபட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது தற்போது சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.785 லிருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே