பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரிக்கு வருகிறார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை இந்த பயணத்தின் போது அவர் தொடங்கி வைக்க  உள்ளார். அதோடு இலாசுப்பேட்டை விமான நிலையத்தை ஒட்டியுள்ள மைதானத்தில் நடைபெறும் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். அவரது வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை உள்ளூர் போலீசார் வெளியிட்டிருந்தனர். நாளை (25 பிப்ரவரி) பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க உற்சாகத்தில் உள்ளனர் பாஜகவினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே