தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறிவித்துள்ள கால வரையற்ற வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை முதல் திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுட்டு வருகின்றன. சென்னையில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம், தூத்துக்குடி, விருதுநகர், மரக்காணம் என பல பணிமனைகளில் மிகக்குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படு வருகின்றன.

சென்னையில் பல்லவன் இல்லம் மற்றும் பல்வேறு பணிமனைகளில் இருந்து குறைந்த அளவே உள்ளூர் பேரும்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகளும் குறைந்தயளவே இயக்கப்பட்டு வருகின்றன.

தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே