இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளன. இதனால் இரண்டு அணி வீரர்களும் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள்.
முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
அதுபோல வங்கதேச அணியும் தொடரை கைப்பற்றுவதற்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.