உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி மேல்முறையீடு தேவையில்லை என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
வழக்கில் ஒரு தரப்பாக வாதிட்ட சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் தீர்ப்பை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை என்றாலும் மறுசீராய்வு மனு அவசியமா?? என்பது குறித்து வாரியம் முடிவு செய்யும் என்று அதன் வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பிரான ஓவைசி, உச்சநீதிமன்றம் தவறிழைக்காத ஒன்று அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இக்கருத்து நீதித்துறையை அவமதிப்பதாகும் என்று பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்