சென்னை ராயப்பேட்டையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக அணி தோல்வி அடைந்தது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கட்சியின் ஆக்கப்பணிகள், கட்சியின் சட்டத்திருத்தம், உள்ளாட்சி தேர்தல், தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்ட பொருள் குறித்து விவாதிக்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே