வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல் துறையின் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள இ.எஸ். தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருண் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே