முனைவர் பட்டம் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி

நகைச்சுவை நடிகர் சார்லி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி உள்ளது.

நேற்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டம் அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இதுவரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக 800 படங்களுக்கு மேல் நடித்துள்ள இயற்பெயர் மனோகர்.

சார்லி சாப்ளின் மீது ஏற்பட்ட பற்றால் தனது பெயரை சார்லி என மாற்றிக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே