1 கிலோ சாக்லெட்டின் விலை ரூ.4.3 லட்சமா…!

உலகின் மிக விலை உயர்ந்த சாக்லேட்டுகளை ஐடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐடிசியின் பிரீமியம் ஃபாபெல்லே(FABELLE) பிராண்டில் ஒரு கிலோ 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாக்லேட்யின் முதல் பெட்டியை நிதித் துறையை சேர்ந்த ஒருவர் வாங்கினார்.

மரத்தால் ஆன பெட்டியில், 15 ஃபாபெல்லே(FABELLE) சாக்லேட்டுகள் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஃபாபெல்லே(FABELLE) உலகின் மிக விலை உயர்ந்த சாக்லேட் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே