குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி..!!

மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியாயினர். இடிபாடுகளுக்குள் 10 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவின் பவமன்புரா பகுதியில் பழைய கட்டிடம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாதிப்பில் அங்கு நிறுத்தப்படிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். 

கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்றும் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே