தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கரோனா காலத்தில் நீண்ட காலமாக மூடிக் கிடந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இயங்கிவந்தன.
தற்போது மாற்றப்பட்டு, மீண்டும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிவந்த அரசு அலுவலகங்கள் ஜனவரி 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.