வாக்குப்பெட்டிகள் இருக்கும் பூட்டிய அறைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு…!

சீர்காழியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 2 பேர் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து, எதிர்க்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி வளாகத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்குப்பெட்டிகள் இருக்கும் பூட்டிய அறைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.

தகவலறிந்து திரண்ட எதிர்க்கட்சியினர், காவிரிபூம்பட்டினம், பூம்புகார் ஊராட்சிகளுக்கான முகவர்கள் படிவங்கள் கீழே இருந்ததை கண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட வந்ததாக தெரிவித்தும், அதனை ஏற்காமல், எதிர்க்கட்சியினர் கல்லூரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சிலர் கல்லூரி மீது கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே