எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது..!!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்த அவர்கள், 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே