புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து திருடப்பட்ட வாக்குப்பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியின் பின்பக்க கதவை உடைத்து, மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து, போலீசார் வாக்குப்பெட்டியை மீண்டும் பத்திரமாக மீட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுபோதையில் வாக்குப்பெட்டியை திருடிவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.