மனதின் குரல் : நாமக்கல் ஓட்டுனரின் மகள் கனிகாவுக்கு பிரதமர் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி சாமானிய மக்களுடன் உரையாடவும், கருத்துக்களை பரிமாறவும் தன்னுடைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்.

இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், CBSE 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த ஓட்டுனரின் மகளான கனிகா என்ற மாணவியுடன் உரையாடினார்.

அதிக மதிப்பெண்களைப் பெற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், மாணவியின் ஊரைக் குறித்துக் கேட்டார்.

நாமக்கல் என்று கூறியவுடன், இது வரை நாமக்கல் என்றால் அங்கிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் தான் தன் நினைவுக்கு வரும் என்றும், இனிமேல் கனிகாவுடனான உரையாடலும் நினைவுக்கு வரும் என்றார்.

அவருடைய குடும்பத்தையும், தேர்வு எழுதிய அனுபவத்தையும் கேட்டறிந்த பிரதமர், அவர் ஓட்டுனரின் மகள் என்பதையும்; அவர் சகோதரி ஏற்கனவே மருத்துவப் படிப்பு பயில்வதையும் அறிந்தவுடன் ஆச்சர்யமடைந்து அவரின் தந்தைக்கும் குடும்பத்திற்கும் தன் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தார் .

மாணவி கனிகாவின் மருத்துவராகும் கனவு நினைவேற தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த உரையாடல் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் முருகனும் ட்வீட் வெளியிட்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே