ரஸ்க்கை பாக்கெட்டில் அடைக்கும் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது ஊழியர் ஒருவர் தரையில் ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்க்களை தனது காலால் மிதித்து அதனை பாக்கெட்டில் அடைக்கிறார்.
அப்போது அந்த ரஸ்க்குகளை நாக்கால் துழாவி பாக்கெட்டில் அடைத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விஷயத்தை அவர் வேண்டுமென்றே செய்தார் என்பது அந்த வீடியோவில் தெள்ள தெளிவாகிறது. அந்த வீடியோவில் அந்த ரஸ்க்குகளின் மீது கால்களை வைத்து கொண்டும் அதை காலால் மிதித்து அடுக்குவது தெரிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஸ்னாக்ஸ் ரஸ்க் ஆகும். காலையிலும் மாலையிலும் ரஸ்கை பாலிலும் காபி, டீயிலும் தொட்டு ரஸ்கை சாப்பிட்டு வருகிறார்கள்.
ஊழியர்கள்
இந்த ஊழியரின் செயலை சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதே போன்று ஆகஸ்ட் மாதம் பானிபுரி கடை நடத்தும் நபர் வேலை செய்து கொண்டே சிறிய மக்கில் சிறுநீரை பிடித்து பானிபூரியில் புதினா நீரில் கலந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
லாரி கிளீனர்
இது போல் பால் ஏற்றிச் செல்லும் லாரியில் இறங்கி லாரி கிளீனர் ஒருவர் கால் கழுவிய வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தைகள் தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை குடிக்கிறார்கள். அந்த பாலிலும் இது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்களை செய்தது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரணி 10 வயது சிறுமி
அண்மையில் ஆரணியில் ஒரு பிரியாணிக் கடையில் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியானார். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு சமைக்கப்பட்ட கறியை உணவு தரத்தை சோதிக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அன்றைய தினம் சமைக்கப்பட்ட கோழி கறி கெட்டு போனதே இத்தனை பாதிப்புக்கு காரணம் என சொல்கிறார்கள். எனவே உணவு தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், சாலையோர கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ரெய்டு நடத்தினால் இது போன்ற பாதிப்புகளை தடுக்கலாம் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.