அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள்

இந்த அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருப்பதால் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை நாட்களாக உள்ளன.

இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயினும் ஏடிஎம்களில் தினமும் வழக்கம் போல் பணம் நிரப்பப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆயுதப் பூஜையை முன்னிட்டும் 8ம் தேதி தசராவை முன்னிட்டும் மூடப்பட்டிருக்கும்.

அது மட்டுமின்றி அக்டோபர் 12 இரண்டாம் சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களாகும்.

அக்டோபர் 20ம் தேதி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை, 26ம் தேதி நான்காம் சனிக்கிழமை.

27ம் தேதி தீபாவளிப் பண்டிகை, இது தவிர 28,29 ஆகிய தேதிகளிலும் கோவர்த்தன பூஜை மற்றும் பாய் தூஜ் போன்ற வடமாநில பண்டிகைகளால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே