3-வது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு சரவணன் தெருவைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவியும் 9 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளது.

இதனிடையே ஜெயஸ்ரீ தனது வீட்டு பால்கனியில் நின்று தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கையிலிருந்த குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததுள்ளது.

இதில் படுகாயமடைந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே