குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
அவ்வப்போது சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்தின் தவசி திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபலம்.
ஐயா, வேலு, எல்லாம் அவன் செயல், ஆகிய திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி நடித்த காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை.

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல் பாலாவின் “நான் கடவுள்” திரைப்படத்தில் குணசித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார் கிருஷ்ணமூர்த்தி.
ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், படப்பிடிப்புக்காக குமுளி சென்றிருந்த போது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.