ஆயுதபூஜை கொண்டாட்டம் – தலைவர்கள் வாழ்த்து

இன்று தமிழகமெங்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு தனது சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” திருநாளை பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் உள்ளம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே