வரிகுறைப்பு போன்ற நடவடிக்கையின் மூலம் இதை மறைக்க முடியாது – ராகுல் காந்தி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

இந்திய பொருளாதாரத்தின் எதார்த்த நிலையை வரி குறைப்பு போன்ற நடவடிக்கையின் மூலம் மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன் கார்ப்பரேட் வரிகளை குறைத்து இந்திய பங்குச்சந்தைகளில் அதிகரிக்க செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக விமர்ச்சித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவழிப்பதின் மூலம் உலகின் அதிக பொருட்செலவில் நடைபெறும் நிகழ்ச்சி என்ற பெயரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“ஹவ்டி மோடி” போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளால் இந்தியாவின் பொருளாதார நிலையை மறைக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே