நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தன்னம்பிக்கை உரை..!

சந்திரயான் 2 நிலவை நெருங்கிவிட்ட போதும் அதன் இலக்கை எட்டாததற்கு மனச்சோர்வு அடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையளித்தார். நாடே உங்களுக்கு துணை நிற்கிறது என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இரவு 2 மணிக்கும் மேலாக பெங்களூர் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடிய மோடி காலை எட்டு மணிக்கு மீண்டும் இஸ்ரோ மையத்திற்கு வந்து விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் இமைப்பொழுதும் சோராத ஈடு இணையற்ற உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி தெரிவித்தார். இடையூறுகளால் இலக்குகளில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியளித்த மோடி விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே கிடையாது.

முயற்சி முயற்சி மீண்டும் மீண்டும் முயற்சிதான் என்றார்.இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், அதன் சாதனைகளை பாராட்டிய மோடி விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமைப்படுவதாக தெரிவித்த மோடி இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு நாடும் அரசும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

இப்போதும் கூட ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது என்று கூறிய மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மீதான முழு நம்பிக்கையை வெளியிட்டு எதிர்கால திட்டங்களுக்காக வாழ்த்து கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே