தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்வு

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் இந்த பால் விலை உயர்வு நடைபெற்றிருக்கிறது. கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி அதை தொடர்ந்து பால் விலையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பால் விலை உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்திருப்பதாக புதுச்சேரி அரசு விளக்கம் அளித்திருக்கிறது. விற்பனை விலை லிட்டருக்கு 42 ரூபாயிலிருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் கொள்முதல் விலை ரூபாய் 30 லிருந்து ரூபாய் 34 ஆக உயர்வு பெற்றிருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே