திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் (GI) குறியீடு

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் (GI) குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் பூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள நாகல்நகர், வேடப்பட்டி, நல்லாம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. மாங்காய்பூட்டு, பெட்டிபூட்டு, அலாரம்பூட்டு, கைவிலங்குபூட்டு என பல வகையான பூட்டுகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த அலிகார் நிறுவனத்தின் குறைந்த விலை பூட்டுக்களால் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழில் நலிவடைந்தது.

தற்போது திண்டுக்கல் புவிசார் (GI) குறியீடு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே